Yadav: அழுது முறையிடாதீர், கொலை செய்யுங்கள்

Yadav

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள Purvanchal University என்ற பல்கலைக்கழகத்து vice-chancellor Raja Ram Yadav தனது மாணவர்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில் “நீங்கள் யாருடனும் சண்டையிடும் நிலைமை தோன்றினால், அழுது கொண்டு என்னிடம் வராதீர்கள், அவர்களை அடியுங்கள், தேவைப்பட்டால் அவர்களை  கொலை செய்யுங்கள், நாங்கள் மிகுதியை பின்னர் கவனிப்போம்” என்று கூறியுள்ளார்.
.
உத்தர பிரதேசத்தில் உள்ள Ghazipur என்ற நகரில் சனிக்கிழமை தனது மாணவர் மத்தியில் செய்து கொண்ட ஒரு பேச்சின்போதே Yadav இவ்வாறு கூறியுள்ளார்.
.
மறுநாள் அந்த பகுதியில் ஒரு போலீஸ் அதிகாரி கல் வீச்சுக்கு இலக்காகி மரணம் அடைந்துள்ளார்.
.
மறுநாள் அப்பகுதியில் இடம்பெற்ற ஊர்வலம் ஒன்றில் பங்குகொண்ட இந்திய பிரதமர் மோதி மேற்படிவிடயம் தொடர்பாக கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை. இங்கு அண்மைக்காலத்தில் இந்து வாத அரசியல்வாதிகள் சட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர்.
.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், அவர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் வன்முறைகள் அதிகரிப்பதாக கூறப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். “தேவைப்பட்டால் ஆளுக்கொரு கத்தி வைத்து கொள்ளுங்கள்” என்று கூறி இருந்தார். எம்.ஜி.ஆர் கூற்றின் தவறை மறைக்க ஆதரவாளர் பெரும் உத்திகளை கையாண்டனர். “எம்.ஜி.ஆர். வெட்டும் கத்தியை வைத்திருக்குமாறு கூறவில்லை, பதிலாக சத்தம் போடுமாறே (பலமாக கத்தி வைக்குமாறே) கூறினார்” என்றும் விளக்கப்பட்டது.
.