அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவிக்கு தேர்தல் தோல்விகள்

AngelaMerkel

சிரியா யுத்தத்தின் காரணமாக ஜேர்மனை நோக்கி படையெடுத்த அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவி (German Chancellor) Angela Merkel அங்கு இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். மூன்று மாநிலங்களில் இந்த தேர்தல் இடம்பெற்று இருந்தது. இவரி கட்சியான CDU 1962 ஆம் ஆண்டு முதல் தமது கையில் வைத்திருந்த Baden-Württemberg மாநிலத்தையும் இழந்துள்ளது. இவரின் கட்சிக்கு எதிராகவும், மத்தியகிழக்கு அகதிகளின் வருகைக்கு எதிராகவும் குரல் கொடுத்த AfD கணிசமான தேர்தல் வெற்றியை அடைந்துள்ளது.
.
வலதுசாரிகளான AfD அகதிகளின் வருகைக்கு எதிராக பலத்த போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தது.
.
CDU மட்டுமல்லாது வழமையாக பெரும் வாக்குகள் பெரும் SPD கட்சியும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. வழமையாக CDU கட்சி அல்லது SPD கட்சி, சில சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைப்பதுண்டு. இப்போது இந்த முன்னணி கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன.
.

சிலர் Angela Merkel, அகதிகள் மீது அவர் காட்டிய கருணை காரணமாக, சமாதானத்துக்கான நோபெல் பரிசை அடையலாம் என்றும் கருதிகின்றனர்.
.