அகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள்

MeditSea

லிபியாவில் (Libya) இருந்து ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் வள்ளம் ஒன்றில் இருந்து 50 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் Poseidon என்ற காவல் துறை கப்பலே இவ்வுடல்களை புதன்கிழமை கண்டுள்ளன.
.
சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் யுத்தம் காரணமாகவும் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை காரணமாகவும் பெருமளவில் அகதிகள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர்.
.
அண்மையில் Mediterranean கடல் அமைதியாக உள்ளதால் வள்ளங்கள் மூலம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்படி சுவீடன் கப்பல் முதலில் 130 அகதிகளை காப்பாற்றி இருந்தது. அதன் பின்னரே பிரிதோர் வள்ளத்தில் 50 உடல்களை கண்டது.
.
அதேவேளை Iris கப்பல் ஒன்று வேறு 500 அகதிகளை காப்பாற்றி உள்ளது.
.

இந்த வருடத்தில் மட்டும் 2,365 அகதிகள் Mediterranean கடலில் பலியாகி உள்ளதாக International Organization for Migration கூறுகிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,779 அகதிகள் இந்த கடலில் பலியாகி இருந்தனர்.
.