அங்கேலா மெர்கலை ஒபாமா உளவுபார்த்தார்?

அங்கேலா மெர்கலை ஒபாமா உளவுபார்த்தார்?

ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மெர்கலுடன் (Angela Merkel) முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமா நட்பான உறவை கொண்டிருந்தது போல் இருந்தாலும் ஒபாமா காலத்தில் அங்கேலா மீது அமெரிக்காவின் National Security Agency (NSA) உளவுபார்த்துள்ளது.

இந்த உளவுக்கு அமெரிக்காவின் NSA டென்மார்க்கின் FE என்ற உளவு அமைப்பை பயன்படுத்தி உள்ளது. இந்த உண்மையை டென்மார்க்கின் செய்தி நிறுவனமான Danmarks Radio வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு சுவிஸின் SVT, நோர்வேயின் NRK, ஜெர்மனியின் NDR, WDR, Suddeutsche Zeitung, பிரான்சின் Le Monde ஆகியனவும் உதவி உள்ளன.

அங்கேலா மட்டுமன்றி முன்னாள் வெளியுறவு அமைச்சர் Frank-Walter Stenmeier, எதிர்கட்சி தலைவர் Peer Stenbruck ஆகியோர் மீதும், சுவீடன், நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மீதும் NSA உளவு செய்துள்ளது.

மேற்படி தலைவர்களின் text messages, தொலைபேசி உரையாடல்கள், இணைய தேடுதல்கள் எல்லாம் உளவு செய்யப்பட்டு உள்ளன.
சுவீடன், நோர்வே, ஜெர்மனி, ஒல்லாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கான பல கடல்கீழ் இணைய இணைப்புகள் டென்மார்க் மூலம் செல்கின்றன.

அமெரிக்கா தனது நடப்பு நாடுகள் உட்பட பிற நாடுகள் சீனாவின் Huawei நிறுவனத்தின் 5G தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்துவதை வெறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அந்த நாடுகளை சீனா இலகுவில் உளவு பார்க்க வசதியாக இருக்கும். மற்றையது அந்த நாடுகளை அமெரிக்கா இலகுவில் உளவு பார்க்க முடியாது போகும்.