அதிக ஊதியம் பெறும் அரசியல்வாதிகள்

அதிக ஊதியம் பெறும் அரசியல்வாதிகள்

உலகில் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் உள்ளார். சீனா போன்ற சில நாடுகளின் தலைவர்கள் பெறும் ஊதியம் பகிரங்கத்துக்கு வருவதில்லை. அதனால் அந்த நாடுகள் இந்த கணிப்பில் இல்லை. அத்துடன் சட்டத்துக்கு அப்பால் பெறும் வருமதிகளும் இந்த பட்டியலில் இல்லை.

1) சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong
இவரின் ஆண்டு ஊதியம் $1.6 மில்லியன். பதவி காலத்தில் இவர் 106 ஏக்கர் நிலத்தில் உள்ள The Istana என்ற மாளிகையில் வாழ்கிறார்.

2) ஹாங் காங் Chief Executive Carrie Lam
இவரின் ஆண்டு ஊதியம் $568,400. இவருக்கு விலை உயர்ந்த Lexus LS 600h மற்றும் 1997 Mercedes-Benz S00L கார்கள் பாவனைக்கு உண்டு. இவரின் அரச காருக்கு இலக்க தகடு இல்லை.

3) அமெரிக்க சனாதிபதி ஜோ பைடென்
இவரின் ஆண்டு ஊதியம் $400,000. பதவிக்காலத்தில் இவர் வெள்ளை மாளிகையில் வாழ்வார். மொத்தம் 6 மாடிகளை கொண்ட வெள்ளை மாளிகையில் 132 அறைகள் உண்டு. இவர் பயணிக்க Air Force One என்ற, 4,000 சதுர அடி பரப்பளவு கொண்ட, Boeing 747 விமானமும் உண்டு. சிறு தூரங்கள் பறக்க Marine One என்ற ஹெலியும் உண்டு.

4) அஸ்ரேலிய பிரதமர் Scott Morrison
இவரின் ஆண்டு ஊதியம் $384,800. இவருக்கு இரண்டு வதிவிடங்கள் உண்டு.

5) ஜேர்மனி அதிபர் Angela Merkel
இவரின் ஆண்டு ஊதியம் $369,700. இவரின் பாவனைக்கு Airbus A340 வகை விமானம் உண்டு.

6) Chancellor of Austria Sebastian Kurz
இவரின் ஆண்டு ஊதியம் $328,600. இவர் அந்த நாட்டின் பொது விமானத்திலேயே பயணிப்பார். ஆனால் ஒரு 4 ஆசனங்கள் கொண்ட விமானமும் இவரின் பாவனைக்கு உண்டு.

7) நியூ சிலாந்து பிரதமர் Jacinda Ardern
இவரின் ஆண்டு ஊதியம் $325,500.

8) Luxembourg பிரதமர் Xavier Bettel
இவரின் ஆண்டு ஊதியம் $278,000. இவரின் பாவனைக்கு சிறிய Cessna 550 Citation II மற்றும் Learjet 35A வகை விமானங்கள் இரண்டு உண்டு.

9) பெல்ஜியம் பிரதமர் Alexander De Croo
இவரின் ஆண்டு ஊதியம் $263,000. இவரின் பாவனைக்கு ஒரு Airbus A321 விமானமும் உண்டு. அத்துடன் சிறிய Dassault Falcon 90 விமானமும், ERJ 135s விமானமும் பாவனைக்கு உண்டு.

10) கனடிய பிரதமர் Justin Trudeau
இவரின் ஆண்டு ஊதியம் $260,000. இவரின் பதவிக்கால வதிவிடத்தில் 22 அறைகள் உண்டு.

11) ஜப்பான் பிரதமர் Yoshihide Suga
இவரின் ஆண்டு ஊதியம் $255,000. இவரின் பாவனைக்கு பெரிய Boeing 777-300ER வகை விமானமும் உண்டு. இந்த விமானத்தை emperor ரும் பாவனை செய்வார்.