அந்தமான் ஆதிவாசிகள் அமெரிக்கரை கொலை

Andaman

John Allen Chau என்ற 27 வயது அமெரிக்கரை அந்தமான் தீவுகளில் ஒன்றான North Sentinel தீவில் வாழும் ஆதிவாசிகள் அம்புகளால் தாக்கி கொலை செய்துள்ளார். Sentinelese என்று வெளியாரால் அழைக்கப்படும் இந்த ஆதிவாசிகள் வெளியார் அங்கு செல்வதை விரும்பவில்லை.
.
John Chau மேற்படி தீவை அடைய இந்த மாதம் 14 ஆம் திகதி முனைந்துள்ளார். முயற்சி பலிக்காதவிடத்து, இரு தினங்களின் பின் மீண்டும் அத்தீவு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போதே இவர் அம்புகளால் கொலை செய்யப்பட்டுளார்.
.
John Chau அத்தீவில் கிறிஸ்தவத்தை பரப்பும் முயற்சியிலேயே அங்கு சென்றுள்ளார். இவரை சட்டவிரோதமாக எடுத்து சென்ற மீனவர்கள் திரும்பி தப்பியோடியுள்ளார். அவர்களுள் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த தீவு ஆதிவாசிகளை  கைது செய்யும் உரிமை அந்தமான் பொலிஸாருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
.
வெளி உலகை அறவே அறியாத இந்த ஆதிவாசிகளின் தொகை சுமார் 50 முதல் 150 வரையில் இருக்கலாம் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
இந்த ஆதிவாசிகள் 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிப்பு அடைந்திருக்கவில்லை. அப்போது அவர்களின் நலன்களை அறிய சென்ற ஹெலி மீதும் இவர்கள் அம்புகளை எய்திருந்தனர்.

.