அபுதாபி வரும் மது, விவாகம் இன்றிய குடியிருப்பு

அபுதாபி வரும் மது, விவாகம் இன்றிய குடியிருப்பு

இஸ்லாமியர் மற்றைய நாடுகளுக்கு பரவும் வேளையில், இஸ்லாமியர் அல்லாதோர் (non-Muslims) UAE போன்ற நாடுகளுக்கும் செல்வதால் இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமியர் அல்லாதோருக்கான சட்டங்களை உருவாக்க ஆரம்பித்து உள்ளன. இதற்கு அமைய UAE பெரும் சட்ட மாற்றங்ககளை அறிவித்து உள்ளது.

அபுதாபியில் (Abu Dhabi) நடைமுறைக்கு வரும் இந்த புதிய சட்டத்தில் இஸ்லாமியர் அல்லதோரின் விவாகரத்துக்கள் விதிமுறை செய்யப்படுகிறது. இவர்களுக்கான விவாகரத்து விதிமுறைகள் இஸ்லாமிய முறைப்படி அல்லாது, பொது முறைப்படி அமையும். அதுமட்டுமன்றி விவாகம் செய்யாதோர் (unmarried) பொது முறைப்படி (civil) இணைந்து குடும்பமாக வாழவும் இப்புதிய சட்டம் வழி செய்கிறது.

விவாகரத்தின் பின் இஸ்லாமியர் அல்லாதோரின் பிள்ளைகளை joint custody மூலம் வளர்க்கவும் புதிய சட்டம் வசதி செய்கிறது.

செப்டம்பர் மாதம் முதல் மது கொள்வனவுக்கான உரிமை சட்டத்தையும் நீக்கி இருந்தது அபுதாபி. அதனால் இஸ்லாமியரும் மது அருந்த சட்டம் வழி செய்கிறது.

இஸ்லாமியர் அல்லாதோரின் வழக்குகள் அரபு அல்லது ஆங்கில மொழியில் இடம்பெறவும் வசதிகள் செய்யப்படுகின்றன.

அபுதாபியில் வாழும் மக்களில் 80% மக்கள் வெளிநாட்டினர். இவர்களில் சிலருக்கு அபுதாபி குடியுரிமை வழங்கவும் வசதி செய்யவுள்ளது. முழு UAE அளவில் வாழும் மக்களில் 78.1% மக்கள் தென்னாசியர், இந்தியர் 38.2%, பாகிஸ்தானியர் 27.4%, பங்களாதேசத்தினர் 12.5%. மத அடிப்படையில் 76.% இஸ்லாமியர், 12.7% கிறீஸ்தவர், 7.5% இந்துக்கள்.

2005ம் ஆண்டில் சுமார் 4.1 மில்லியன் மக்களை மட்டும் கொண்டிருந்த UAE அதிகரித்து வரும் எரிபொருள் வருமானம் காரணமாக வளர்ந்து தற்போது 9.9 மில்லியன் மக்களை கொண்டுள்ளது.

UAE என்ற நாடு அபுதாபி, டுபாய் உட்பட 7 ஆட்சிகளை உள்ளடக்கியது.