அமெரிக்காவின் இரகசிய செய்மதி தொலைவு

Zuma

நேற்று ஞாயிறு ஏவப்பட்ட Zuma என்ற குறியீட்டு நாமம் கொண்ட அமெரிக்காவின் உளவுபார்க்கும் செய்மதி தொடர்புகள் எதுவும் இன்றி தொலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்மதியை அமெரிக்காவின் Northrop Grumman என்ற நிறுவனம் தயாரித்தும், SpaceX என்ற நிறுவனம் ஏவி இருந்திருந்தாலும், இந்த செய்மதியை வடிவமைத்த குழுவின் அல்லது நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
.
இந்த செய்மதிக்கான மொத்த செலவும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், அச்செலவு பல பில்லியன் டாலர் ஆகவிருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன.
.
Florida மாநிலத்தில் உள்ள Cape Canaveral தளத்தில் இருந்து இந்த செய்மதி SpaceX Falcon 9 என்ற ஏவுகலம் மூலம் ஞாயிறு இரவு 8:00 மணிக்கு ஏவப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் ஏவல் திட்டமிட்டபடி இருந்திருந்தாலும் பின்னர் செய்மதி உரிய சுற்றுப்பாதைக்கு (orbit) செலவில்லை. இது மற்றைய பாகங்களுடன் கடலுள் வீழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
.
இந்த செய்மதி தொலைந்த உண்மை இன்று திங்கள் கசிய ஆரம்பித்துள்ளது.

.