அமெரிக்காவின் Trumpக்கு இந்தியாவில் இந்து சேன வழிபாடு

HinduSena

அமெரிக்காவில் இந்த வருடம் நவம்பரில் ஜானதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் Republican கட்சி சார்பிலும் Democrats சார்பிலும் போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
.
Republican கட்சி போட்டியில் முன்னணியில் இருப்பவர் Donald Trump என்பவர். இவர் மெக்ஸ்சிக்கோ நாட்டவர் மீதும், இஸ்லாமியர் மீதும் கடுமையான துவேச கருத்துக்களை வெளியிட்டு இருந்தவர். பெருபாலான அமெரிக்கர்களே இவரை துவேசி என்று கருதும்போது, இந்தியாவின் கடும்போக்கு Hindu Sena இவருக்கு வெற்றிகிட்ட இந்தியாவில் பூசைகள் செய்துள்ளார்கள்.
.

குறிப்பாக Trumpஇன் இஸ்லாமிய விரோத கொள்கைகளால் Hindu Sena உற்சாகம் கொண்டுள்ளது. Trumpஇன் படத்துக்கு இவர்கள் பொட்டும் இட்டுள்ளார்கள். இந்து சேன தலைவர் Vishnu Gupta தனது உரையில் Trumpஐ புகழ்ந்து குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் Trump மட்டும்தான் மனிதநேயத்தை காப்பாற்றும் என்றுள்ளார்.
.