அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு மீண்டும் அகதிகள்

CanadaUS

அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு அகதிகள் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இப்படையெடுப்பில் இம்முறை முன்னணியில் உள்ளவர்கள் ஹெயிற்ரி (Haiti) நாட்டவரே. இவர்கள் பிரெஞ்ச் மொழியை இரண்டாம் மொழியாக கொண்டவர்கள் என்பதால் மொன்றியால் நகர் நேக்கியே இவர்கள் நகர்கின்றனர்.
.
அதிக அளவில் அகதிகள் வருவதால், அவர்களை தங்கவைக்க முற்கால ஒலிம்பிக் விளையாட்டு அரங்கான, 56,000 ஆசனங்களை கொண்ட, Montreal Olympic Stadium அகதிகள் தங்குமிடமாக மாற்றப்பட்டு உள்ளது.
.
இந்த அகதிகளில் பல நாட்டவர் இருந்தாலும் Haiti, Burundi, Syria போன்ற நாட்டவரே அதிகமாக உள்ளனர். இந்த அகதிகளில் 90%மானோர் Haiti நாட்டவர் என்று கூறப்படுகிறது.
.
கடந்த கிழமை மட்டும் சுமார் 500 Haiti அகதிகள் பிரெஞ்ச் மாநிலமான குபெக்குக்கு (Quebec) வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
.
2010 ஆம் ஆண்டு Haitiயின் நிலநடுக்கத்தின் பின் சுமார் 50,000 Haiti மக்கள் அமெரிக்கா வந்து தற்காலிக வதிவிடம் பெற்று இருந்தனர். இவர்களின் தற்காலிக வதிவிட உரிமை 2018 ஆம் ஆண்டு தை மாதம் வரை நீடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களை தமது நாட்டுக்கு திரும்புவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அழைப்பும் விடப்பட்டு உள்ளது. இந்நிலையிலேயே இவர்கள் கனடா நோக்கி படையெடுக்கின்றனர்.
.

Haitiயில் பிறந்து தற்போது கனடாவில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள Emmanuel Dubourg இந்த அகதிகளை வரவேற்று உள்ளார்.
.