அமெரிக்காவிலும் சீக்கியரை கொல்ல இந்தியா முனைந்தது?

அமெரிக்காவிலும் சீக்கியரை கொல்ல இந்தியா முனைந்தது?

அமெரிக்காவிலும் சீக்கியர் ஒருவரை படுகொலை செய்ய இந்தியா முனைந்து இருந்தது என்றும் அதை அறிந்த அமெரிக்கா இந்தியாவை கண்டித்து இருந்தது என்றும் Financial Times செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்கரான Gurpatwant Singh Pannun என்பவரே மேற்படி படுகொலை முயற்சியின் குறி என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோதி பைடெனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற பின்னரே அமெரிக்காவின் எச்சரிக்கை பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையால் இந்தியா பின்வாங்கியதா அல்லது அமெரிக்காவின் FBI காவல் அதிகாரிகள் முயற்சியை முறியடித்தார்களா என்பது கூறப்படவில்லை.

அமெரிக்கா தனது வழக்கு ஒன்றில் சந்தேக நபர் ஒருவரை நியூ யார்க் நீதிமன்றில் அடையாளம் கூறியுள்ளது. ஆனால் அந்த பெயரை பகிரங்கம் செய்யவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சு இதுவரை இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Hardeep Singh Nijjar கொலையில் கனடா இந்தியாவை குற்றம்சாட்டி இரண்டு மாதங்களின் பின்னரே அமெரிக்காவின் எச்சரிக்கை பதிவாகி உள்ளது.