அமெரிக்காவில் அகதிகள் வாகனம் விபத்தில், 10 பேர் பலி

அமெரிக்காவில் அகதிகள் வாகனம் விபத்தில், 10 பேர் பலி

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் அகதிகள் பயணித்த van ஒன்று விபத்துக்கு உள்ளாகியதால் 10 பேர் பலியாகியும், 20 பேர் காயப்பட்டும் உள்ளனர். உள்ளூர் நேரப்படி புதன் பிற்பகல் 4:00 மணிக்கு இந்த விபத்து Encino என்ற சிறு நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த நகரம் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைக்கு அண்மையில் உள்ளது.

அகதிகளுடன் மிக வேகமாக பயணித்த இந்த வாகனம் வலதுபக்கம் திரும்ப முனைகையில் பாதையை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதி உள்ளது. சாரதியும், 9 பயணிகளும் பலியாகி உள்ளனர்.

மேற்படி van 15 பயணிகளை மட்டும் கொண்டிருக்க வடிவமைக்கப்பட்டது என்றாலும், அதில் 30 பேர் பயணித்து உள்ளனர். பயணிகள் தெற்கே உள்ள மெக்ஸிகோ நாட்டில் இருந்து வந்த அகதிகள் என்று நம்பப்டுகிறது.

அமெரிக்காவுள் எல்லை வழியே நுழையும் அகதிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் அகப்படாது இருக்கும் நோக்கில் வேகமாக வடக்கு நோக்கி பயணிப்பதுண்டு. அவர்கள் சிலவேளைகளில் விபத்தில் சிக்குவதும் உண்டு.