அமெரிக்காவில் காட்டுத்தீக்கு 580 வீடுகள் இரை

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு 580 வீடுகள் இரை

அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் உள்ள Boulder Country பகுதியில் ஏற்பட்ட காட்டு தீக்கு குறைந்தது 580 வீடுகள் இரையாகி உள்ளன. வியாழன் ஆரம்பித்த இந்த தீ 1,600 ஏக்கர் நிலத்தையும் அழித்து, 30,000 பேரை இடம்பெயரவும் வைத்துள்ளது.

அங்கு வீசும் கடும் காற்றே தீ வேகமாக பரவ காரணமாக இருந்துள்ளது. இங்கு காற்று வீச்சு சுமார் 160 km/h ஆக இருந்துள்ளது.

ஆனாலும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு winter காலநிலை மீண்டும் வந்துள்ளது. சனிக்கிழமை வரையான காலத்தில் 5 முதல் 10 அங்குல snow வீழ்ச்சி அங்கு இடம்பெறும் என்று காலநிலை அவதானம் கூறுகிறது.