அமெரிக்காவில் தாயை மகன் குத்திக்கொலை

அமெரிக்காவில் தாயை மகன் குத்திக்கொலை

இலங்கையில் பிறந்த 58 வயது தாயான Juanita Koilpillai என்பவரை அவரின் 23 வயது மகன் Andrew Weylin Beavers குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலை ஜூலை 25ம் திகதி அமெரிக்காவின் Maryland என்ற மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மகன் ஜூலை 31ம் திகதி அருகே உள்ள Virginia மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். மகன் தாயுடனேயே வாழ்ந்தவர்.

இவரின் தற்போதைய boyfriend பொலிஸாருக்கு Juanita வையும், அவரின் காரையும் காணவில்லை என்று அறிவித்து இருந்தார். அத்துடன் Juanita வீட்டில் இரத்த கறை இருப்பதையும் தெரிவித்தார். பின்னர் போலீசார் காரையும், தாயின் உடலையும் மகனுடன் கைப்பற்றினர். மகனின் கையிலும் வெட்டு காயங்கள் இருந்துள்ளன.

தாயார் இந்தியாவில் உள்ள Women’s Christian College in Madras யிலும் கல்வி கற்றவர். பின் அமெரிக்கா சென்று University of Kansas பல்கலைக்கழகத்தில் master’s in computer science படித்தவர்.

மரணித்த தாய் 30 ஆண்டுகள் தொழில்நுட்ப துறையில் பணியாற்றியவர். இவர் அமெரிக்காவின் FEMA, Department of Defence ஆகியற்றுடனும் இணைந்து பணியாற்றியவர். இவர் தனது முன்னாள் கணவரான Koilpillai உடன் இணைத்து Cyberwolf என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார். Cyberwolf பின்னர் Symantec நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.