அமெரிக்காவில் நகரும் நகர்கள்

DetroitHouse

சில சந்ததிகளுக்கு முன் செல்வம் நிறைந்த நகர்களாக இருந்த பல அமெரிக்க நகர்கள் இன்று சுருங்கி அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. உதாரணமாக 1950 ஆம் ஆண்டு அளவில் அமெரிக்காவின் செல்வம் நிறைந்த ஒரு நகராக இருந்த Detroit என்ற Michigan மாநில நகர் இன்று பொருளாதார, சனத்தொகை அழிவுகளால் bankruptcy அடைந்த நகர். இவ்வாறு பல நகர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, அதன் காரணமாக மக்கள் வெளியேற சனத்தொகையை இழந்து, அதன் காரணமாக பொருளாதாரத்தை இழந்து அழிகின்றன.
.
RealityTrac என்ற அமைப்பின் கூற்றுப்படி 1.8% அமெரிக்க வீடுகளில் குடியிருப்பாளர் எவரும் இல்லை என்று தபால்காரர்கள் அறிவித்துள்ளார்களாம். சிலர் தாம் வீட்டை கைவிட்டுவிட்டு வெளியேறியதை உற்றார், உறவினர், நிறுவனங்களுக்கு அறிவிக்காதுவிடத்து அவர்கள் வீட்டுக்கு கடிதங்கள் தொடர்ந்து வரும். அக்கடிதங்களை விநியோகிக்க முடியாத தபால்காரர் அவ்விடயத்தை ஆவணப்படுத்துவர். இந்த 1.8% அவ்வாறு ஆவணப்படுத்தப்பட தரவே.Florida மாநிலத்தில் உள்ள Indian Rocks Beach என்ற இடத்தில் 25.9% வீடுகள் இவ்வாறு கைவிடப்படுள்ளதாம்.
.

இவகையில் மிகவும் பாதிக்கப்பட சில நகர்கள் பின்வருமாறு:
.
நகரம்: Harvey, Illinois
வெற்றிட வீடுகள் (வீதம்): 1,110 (11.9%)
மொத்த வீடுகள்: 9,325
தற்போதைய சராசரி வீட்டு விலை: $85,100
.
நகரம்: Ecore, IL
வெற்றிட வீடுகள் (வீதம்): 533 (12.5%)
மொத்த வீடுகள்: 4275
தற்போதைய சராசரி வீட்டு விலை: $50,200
.
நகரம்: Blairsville, Georgia
வெற்றிட வீடுகள் (வீதம்): 1,401 (12.5%)
மொத்த வீடுகள்: 11,214
தற்போதைய சராசரி வீட்டு விலை: 102,900
.
நகரம்: Inkster, Michigan
வெற்றிட வீடுகள் (வீதம்): 1,270 (13.8%)
மொத்த வீடுகள்: 9,227
தற்போதைய சராசரி வீட்டு விலை: $55,400
.
நகரம்:  Hamtramck, Michigan
வெற்றிட வீடுகள் (வீதம்): 2,104 (14.4%)
மொத்த வீடுகள்: 14,645
தற்போதைய சராசரி வீட்டு விலை: $46,600
.
நகரம்: Greenville, Mississippi
வெற்றிட வீடுகள் (வீதம்): 803 (14.4%)
மொத்த வீடுகள்: 5,565
தற்போதைய சராசரி வீட்டு விலை: $77,000
.
நகரம்: River Rough, Michigan
வெற்றிட வீடுகள் (வீதம்): 524 (15.5%)
மொத்த வீடுகள்:3,375
தற்போதைய சராசரி வீட்டு விலை: $38,000
.
நகரம்: Flint, Michigan
வெற்றிட வீடுகள் (வீதம்): 9,699 (16.2%)
மொத்த வீடுகள்: 59,767
தற்போதைய சராசரி வீட்டு விலை: $41,700
.
நகரம்: Brigantine, New Jersey
வெற்றிட வீடுகள் (வீதம்): 1,793 (16.2%)
மொத்த வீடுகள்: 11,071
தற்போதைய சராசரி வீட்டு விலை: $383,400
.
நகரம்: Highland Park, Michigan
வெற்றிட வீடுகள் (வீதம்): 2,716 (17.8%)
மொத்த வீடுகள்: 15,278
தற்போதைய சராசரி வீட்டு விலை: $42,200
.
நகரம்: Detroit, MI
வெற்றிட வீடுகள் (வீதம்): 53,873 (18.9%)
மொத்த வீடுகள்: 284,601
தற்போதைய சராசரி வீட்டு விலை: $50,400
.
நகரம்: Gary, Indiana
வெற்றிட வீடுகள் (வீதம்): 6,527 (20.3%)
மொத்த வீடுகள்: 32,074
தற்போதைய சராசரி வீட்டு விலை: $65,400
.
நகரம்: Indian Rocks Beach, Florida
வெற்றிட வீடுகள் (வீதம்): 1,362 (25.9%)
மொத்த வீடுகள்: 5,260
தற்போதைய சராசரி வீட்டு விலை: $392,400
.
அதேவேளை Toronto நகரில் தற்போதைய சராசரி வீட்டு விலை சுமார் U$ 790,000 (C$ 1,052,000) ஆகும்.
.