அமெரிக்காவில் மீண்டும் ஓரு இந்தியர் மீது சூடு

Seattle

அமெரிக்காவில் நேற்று வெள்ளி இரவு மீண்டும் ஒரு இந்தியர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளது. வெள்ளி மாலை 8:00 மணியளவில் 39 வயதுடைய சீக்கியர் ஒருவர் அவரது வீட்டின் முன் வைத்து  சுடப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவின் பசிபிக் கடலோர Washington மாநிலத்து Seattle நகரின் தெற்கே இடம்பெற்று உள்ளது.
.
இவரை சுட்டது சுமார் 6 அடி உயரமுடைய வெள்ளையர் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. சுடுவதற்கு முன் இருவரும் வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. சுட்டவர் “Go back to your own country” என்றும் கூறியுள்ளார். சூட்டால் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.
.
கடந்த மாதமும் Kansas மாநிலத்து Olathe நகரின் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து Srinivas Kuchibhotla, Alok Madasani ஆகிய இரண்டு இந்திய தொழிநுட்ப பொறியியலாளர்களை Adam Purinton என்ற வெள்ளையர் துப்பாக்கியால் சுட்டிருந்தார். அதில் Kuchibhotla மரணமடைந்ததுடன், Madasani காயமடைந்து இருந்தார். அந்த வெள்ளையருக்கு சுடும்போது “get out of my country” என்று கூறியிருந்தார்.
.

Kansas சூட்டின்போது இந்தியர்களை பாதுகாக்க முனைந்த Ian Grillot என்ற 24 வயது வெள்ளையருக்கு படுகாயம் அடைந்திருந்தார். Ian Grillotஐ பாராட்டிய இந்தியா, வசதி கிடைக்கும்போது இந்தியா வரும்படி இந்திய அரசு கேட்டுள்ளது.
.