அமெரிக்காவில் 11 போலீசாருக்கு சூடு, 5 பலி

 

Dallas

இன்று வியாழன் மாலை அமெரிக்காவின் Texas மாநிலத்து Dallas நகரில் போலீசார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளுக்கு 11 போலீசார் காயமடைந்ததுடன், அதில் 5 போலீசார் மரணம் அடைந்தும் உள்ளனர். போலீசாரை சுட்டவரில் ஒருவரின் படமும் வெளியாகியுள்ளது.
.
கடந்த இரு தினங்களில் அமெரிக்காவின் Louisianan மாநிலத்து Baton Rouge என்ற நகரிலும், Minneapolis மாநிலத்து Minnesota நகரிலும் இரண்டு கருப்பு இன நடுத்தர வயது ஆண்கள் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த இரண்டு கொலைகளையும் கண்டித்து அமெரிக்காவின் பெரு நாகர்கள் எங்கும் இன்று ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு Dallas நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போதே குறைந்தது 11 போலீசார் சுடப்பட்டனர். அதில் 5 போலீசார் பின்னர் மரணம் அடைந்துள்ளனர்.
.

அதேவேளை Dallas நகரில் குண்டு தாக்குதல்கள் இடம்பெறப்போவதாகவும் செய்திகள் பரவவிடப்பட்டுள்ளன.
.