அமெரிக்காவில் 50 அகதிகள் லாரிக்குள் மரணம்

அமெரிக்காவில் 50 அகதிகள் லாரிக்குள் மரணம்

அமெரிக்காவின் Texas மாநிலத்து San Antonio நகரில் மூடப்பட்ட லாரி ஒன்றில் 50 அகதிகள் மரணித்த நிலையில் காணப்பட்டு உள்ளனர். இந்த அகதிகள் பெரும்பாலும் மெக்ஸிக்கோ, குவாட்டமாலா, Honduras ஆகிய நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. San Antonio நகரம் மெக்ஸிக்கோ எல்லையில் இருந்து வடக்கே 260 km தூரத்தில் உள்ள நகரம்.

உள்ளூர் நேரப்படி திங்கள் மாலை 6:00 மணியளவில் அதிகாரிகளுக்கு மரணித்தோர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் 48 பேர் அந்த இடத்திலேயே மரணித்து இருந்தனர். மேலும் இருவர் வைத்தியசாலையில் மரணித்து உள்ளனர்.

அத்துடன் 16 பேர் உயிருடன் காணப்பட்டும் உள்ளனர். அதில் 12 பெரியோரும், 4 சிறுவர்களும் அடங்குவர்.

இப்பகுதில் தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. மதிய வேளையில் இங்கு வெப்பநிலை சுமார் 40 C ஆக உயர்கிறது. மூடிய வாகனம் ஒன்றுள் வெப்பநிலை அதிலும் அதிகமாகவும் காற்றோட்டம் இன்றியும்  இருக்கும்.

2017ம் ஆண்டும் San Antonio நகரில் 10 அகதிகள் இவ்வாறு லாரி ஒன்றில் மரணித்து இருந்தனர். 2003ம் ஆண்டு மேலும் 18 அகதிகள் மரணித்து இருந்தனர். 2021ம் ஆண்டு கலிபோர்ணியா எல்லை பகுதி விபத்து ஒன்றில் 25 அகதிகள் பலியாகி இருந்தனர்.