அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

Syria

சிரியா விடயத்தில் ரஷ்யா அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளது. நேற்று அமெரிக்காவின் 51 அதிகாரிகள் சிரியாவின் அசாத் இராணுவம் மீது அமெரிக்கா தாக்குதல் செய்ய வேண்டும் என்று விடுத்த அறிக்கையின் பின்னரே ரஷ்யா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
ஒபாமா அரசு அசாத்தின் எதிரிகளுக்கு இராணுவ உதவிகளை செய்தாலும், சிரியா மேலே பறக்கும் அமெரிக்க படைகள் அசாத்தின் படைகளை தாக்குவது இல்லை. பதிலாக IS குழுவினரை மட்டுமே தற்போது தாக்குகின்றன. அதனால் அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையில் தற்போது யுத்தம் இல்லை.
.
ஒரு தொகை அமெரிக்க அதிகாரிகள், குறிப்பாக இஸ்ரவேல் சார்பு அதிகாரிகள், அசாத்தை அழித்து தம் சார்பு அரசை சிரியாவில் அமர்த்த விரும்புகின்றனர். எகிப்திலும் இராணுவ கவிழ்ப்பின் மூலம் இவ்வாறு ஒரு மேற்கு மற்றும் இஸ்ரவேல் சார்பு அரசே பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
.

வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டு ஐந்து வருடங்களாக நீடிக்கும் சிரியா உள்நாட்டு யுத்தத்துக்கு இதுவரை சுமார் 400,000 உயிர்கள் பலியாகி உள்ளன. முதலில், மேற்கு அசாத்தின் எதிர்களுக்கு (Free Syrian Army) உதவும்போது, அசாத் அரசு பெரும் இழப்புக்களை கொண்டிருந்தாலும், கடந்த வருடத்தின் இறுதியில் ரஷ்யாவின் படைகள் அசாத்தின் உதவிக்கு வந்தபின் அசாத் அரசு பெரும் வெற்றிகளை கொண்டு வருகிறது.
.