அமெரிக்க அரசு சனிக்கிழமை இரவு முடங்கும்?

அமெரிக்க அரசு சனிக்கிழமை இரவு முடங்கும்?

அமெரிக்க மத்திய அரசு இன்று சனிக்கிழமை இரவு மீண்டும் முடங்கும் நிலையில் உள்ளது. மத்திய அரசுக்கான வரவு-செலவு திட்டம் எற்றுக்கொள்ளப்படாமையே முடங்கலுக்கு காரணம்.

நீண்ட காலமாக அமெரிக்க அரசின் மொத்த செலவுகள் அதன் மொத்த வரவுகளிலும் அதிகமாக உள்ளன. துண்டு விழும் தொகையை எவ்வாறு பெறுவது என்பதே இழுபறிக்கு காரணம். பொதுவாக Democratic கட்சி அரசு மேலதிக கடன் பெற்று தொடர்ந்தும் செலவுகளை செய்ய முனையும். ஆனால் Republican கட்சி செலவுகளை குறைத்து கடன் அதிகரிப்பை தடுக்க முனையும்.

அமெரிக்காவில் அரசு எவ்வளவு கடன் பெறலாம் என்பது அதன் சட்டப்படியான debt ceiling என்ற சுட்டிக்கு கட்டுப்படும். Debt ceiling க்கு மேலதிகமாக கடன் பெற முடியாது. மேலதிகமாக கடன் பெறுவதாயின் debt ceiling அளவை முதலில் அதிகரிக்க வேண்டும்.

2018-2019 காலப்பகுதியில் அமெரிக்க அரசு இந்த காரணத்தால் 35 தினங்கள் முடங்கி இருந்தது. முடங்கும் காலத்தில் அரச ஊழியர்கள், இராணுவத்தினர் உட்பட, ஊதியம் பெற முடியாது. வரவு செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே ஊதியங்கள் வழங்கப்படும். 

தற்போது அமெரிக்காவின் அதிக கடன் எல்லை (debt ceiling) $31.4 டிரில்லியன் ($31,400 பில்லியன்) ஆக உள்ளது.

அரசு வரி மூலம் பெறும் வருமானம் குறைந்து அதேவேளை செலவுகள் அதிகரிப்பதே வரவு-செலவில் துண்டு விழ பிரதான காரணம்.

அமெரிக்க அரசு முடங்கினால் யூகிரேனுக்கு அமெரிக்கா பணம் வழங்குவதும் முடங்கும். சில Republican உறுப்பினர்கள் யூகிரேனுக்கு வழங்கும் உதவிகளை குறைக்க முனைகின்றனர்.