அமெரிக்க, இந்திய முரண்பாடு, $110 மில்லியன் வீடு காரணம்

அமெரிக்க, இந்திய முரண்பாடு, $110 மில்லியன் வீடு காரணம்

இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள, $110 மில்லியன் பெறுமதியான, Lincoln House என்ற அரண்மனை விற்பனை விசயம் தொடர்பாக இந்தியாவின் மோதி அரசும், அமெரிக்காவும் முரண்பட்டு வருகின்றனர். இந்த கிழமை இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Antony Blinken இந்த விசயம் தொடர்பாக மோதியை மீண்டும் அழுத்துவார் என்று கூறப்படுகிறது.

Wankaner House என்ற இந்த 3-மாடி அரண்மனை 1930ம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக்கு கீழ் இருந்த அக்கால Wankaner மகாராசாவுக்கு அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின் இந்த மாளிகை புகழை இழக்க ஆரம்பித்தது. இதன் திருத்த வேலைகளின் செலவுப்பளு அதிகரிக்க மகாராசா குடும்பம் இதை 1959ம் ஆண்டு அமெரிக்காவுக்கு விற்பனை செய்திருந்தது.

அமெரிக்கா இதை Lincoln House என பெயரை மாற்றி அமெரிக்க முகவர் நிலையமாக பயன்படுத்தியது. கொள்வனவுக்கு அமெரிக்கா அப்போது 1.65 மில்லியன் இந்திய ரூபாய்களே (சுமார் $350,000 அல்லது $0.35 மில்லியன்)) செலுத்தி இருந்தது. தற்போது அதன் விலை $110 மில்லியன். இந்த அரண்மனையையே அமெரிக்கா இந்தியாவின் Serum Institute என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் Adar Poonawalla வுக்கு விற்பனை செய்ய முயல்கிறது.

2015ம் ஆண்டில் இந்தியா இந்த விற்பனையை அனுமதித்து இருந்தாலும், பின் வேறு தடைகளை முன்வைத்து வைத்துள்ளது விற்பனையை தடுத்து வருகிறது. அதனால் அமெரிக்கா இந்த மாளிகையை விற்பனை செய்ய முடியாதது உள்ளது. மோதி அரசின் பின்வாங்கலுக்கு இரண்டு காரணங்கள் ஊகிக்கப்படுகின்றன.

ஒன்று Adar Poonawalla ஒரு மோதி ஆதரவாளர் அல்ல. அதனால் அவருக்கு பழமை மிக்க அரண்மனை செல்வதை மோதி விரும்பவில்லை. இரண்டாவது விற்பனை மூலம் அமெரிக்கா இவ்வளவு கொள்ளை இலாபத்தை அடைவதை மோதி அரசு விரும்பவில்லை.

கடற்கரைக்கு அண்மையில், விலை உயர்ந்த பகுதியில் உள்ள இந்த 50,000 சதுர அடி அரண்மனை பாரம்பரிய நிலையம் என்பதால் இதை உடைத்து வேறு கட்டிடங்கள் அமைக்க முடியாது. இதை தொடர்ந்தும் திருத்தியே பாவனை செய்தல் அவசியம்.