அமெரிக்க இராணுவத்தினன் சுட்டு 18 பேர் பலி

அமெரிக்க இராணுவத்தினன் சுட்டு 18 பேர் பலி

இன்று வியாழன் Maine என்ற அமெரிக்காவின் கனடிய எல்லையோர மாநிலத்தில் உள்ள Lewiston என்ற நகரில் reserve இராணுவத்தினன் ஒருவர் செய்த துப்பாக்கி சூட்டுக்கு 18 பேர் பலியாகியும், 13 பேர் காயம் அடைந்தும் உள்ளனர்.

வியாழன் இரவு 7:00 மணியளவில் Just-In-Time என்ற bowling நிலையம் ஒன்றில் இந்த துப்பாக்கி சூடு ஆரம்பித்துள்ளது. அங்கு ஒரு பெண்ணும், 6 ஆண்களும் கொலை செய்யப்பட்டனர். அதில் ஒருவர் 10 வயது சிறுமி. பின்னர் 5 km தூரத்தில் உள்ள Schmengees Bar & Grill என்ற உணவகத்தில் 7 ஆண்கள் கொலை செய்யப்பட்டனர்.

Robert R. Card என்ற 40 வயதுடைய இந்த சந்தேக நபரை போலீசார் தற்போதும் தேடி வருகின்றனர். இவர் ஒரு அமெரிக்க இராணுவ reservist ஆவார். இவர் அமெரிக்காவின் மனநோய் வைத்தியசாலையில் கடந்த கோடை காலத்தில் வைத்தியம் பெற்றவர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

இப்பகுதி பாடசாலைகள் இன்று மூடப்பட்டு உள்ளன. மக்களையும் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர் பயன்படுத்திய SUV வாகனமும் கைவிடப்பட்ட நிலையில் போலீசாரால் 11 km தூரத்தில் உள்ள Lisbon என்ற நகரில் கைப்பற்றப்பட்டு உள்ளது.

2002ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இவர் இதுவரை களமுனை எதற்கும் செல்லாதவர்.

அமெரிக்காவில் எவரும் இலகுவில் சட்டப்படி ஆயுதங்களை கொள்வனவு செய்யலாம். சில மாநிலங்களில் கொள்வனவு செய்பவரின் மனநிலை, வன்முறை வரலாறு ஆகியன கருத்தில் எடுக்கப்படும் என்றாலும், Maine மாநிலத்தில் மனோநிலை பாதிக்கடவரும் பெரும் ஆயுதத்தை கொண்டிருக்கலாம். இந்த மாநிலத்தில் சுமார் 50% வீடுகளில் பல்வேறு வகை ஆயுதங்கள் உள்ளன.