அமெரிக்க எண்ணெய் குழாய் வலையமைப்பு மீது தாக்குதல்

அமெரிக்க எண்ணெய் குழாய் வலையமைப்பு மீது தாக்குதல்

அமெரிக்காவின் Colonial Pipeline என்ற எண்ணெய் குழாய் வலையமைப்பு (8,850 km) இணைய ransomware மூலம் தாக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் இருந்து செயற்படும் DarkSide என்ற இணைய தாக்குதல் குழுவே (hackers) இந்த தாக்குதலை செய்து இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

Ransomware software மூலம் Colonial Pipeline நிறுவனத்தின் 100 GB கணனி தரவுகள் (data) பணயம் வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் $2 மில்லியன் பணம் வழங்கினால் மட்டுமே தவுகள் மீள தரப்படும் என்று தாக்கிய குழு கூறியுள்ளது. தற்காலங்களில் இவ்வகை பணய பணம் bitcoin மூலமே பெறப்படும். Bitcoin சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சாதகமானது.

Colonial Pipeline நிறுவனத்தின் குழாய்கள் மூலம் தினமும் 380 மில்லியன் liters எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நுகர்வோருக்கு காவப்படுகிறது. அது அமெரிக்காவின் கிழக்கு கரையோர மாநிலங்கள் பயன்படுத்தும் எண்ணெய் அளவின் சுமார் 45% ஆகும். இதில் டீசல், பெட்ரோல், விமான பெட்ரோல் ஆகியனவும் அடங்கும்.

குழாய் மூலம் எண்ணெய் காவுதல் தடைப்பட்டதால் கிழக்கே உள்ள மொத்தம் 18 மாநிலங்கள் எண்ணெயை வாகனங்கள் மூலம் காவ தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. Alabama, Arkansas, DC, Delaware, Florida, Georgia, Kentucky, Louisiana, Maryland, Mississippi, New Jersey, New York, North Carolina, Pennsylvania, South Carolina, Tennessee, Texas, Virginia ஆகியனவே அந்த 18 மாநிலங்கள்.

மேற்படி தடையால் எரிபொருள் விலை அடுத்துவரும் சில தினங்களில் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமைக்கு முன் குழாய்கள் மீண்டும் சேவைக்கு வராவிடின் எரிபொருள் தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் பல தினங்களுக்கு நீடிக்கும்.