அமெரிக்க கொள்கைகளால் அமெரிக்காவுக்கு பயனல்ல

அமெரிக்க கொள்கைகளால் அமெரிக்காவுக்கு பயனல்ல

முதலில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பும் பின்னர் பைடெனும் சீனாவுக்கு எதிராக நடைமுறை செய்த பொருளாதார கொள்கைகள் சீனாவுக்கு பெரிதாக பாதிப்புகளை வழங்கவில்லை என்கிறது அமெரிக்க ஆய்வு அறிக்கை ஒன்று.

2016ம் ஆண்டில் சீனாவில் இருந்து 21.6% பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்திருந்தது. ஆனால் அத்தொகை ரம்ப், பைடென் நடைமுறை செய்த பொருளாதார கொள்கைகள் காரணமாக 2022ம் ஆண்டில் 16.5% ஆக குறைந்து இருந்தது.

ஆனாலும் தற்போது அதிகரித்த அளவில் சீன பொருட்கள் வியட்நாம், மெக்சிகோ போன்ற மூன்றாம் நாடுகள் மூலம் அமெரிக்காவை அடைகின்றன என்கிறது மேற்படி ஆய்வு அறிக்கை. சீனாவில் இருந்து வியட்நாம், மெக்சிக்கோ போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதிகள் இக்காலத்தில் அதிகரித்து உள்ளன.

அமெரிக்காவில் விலைவாசி அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கருதுகிறது மேற்படி ஆய்வு.

அமெரிக்காவின் Harvard Business School, Truck School of Business ஆகியன தயாரித்த ஆய்வே இவ்வாறு கூறியுள்ளது.