அமெரிக்க தாக்குதலுக்கு 80 சிரியா இராணுவம் பலி

Syria

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள Deir el-Zour விமான நிலையத்துக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள சிரியன் இராணுவம் மீது அமெரிக்க யுத்த விமானங்கள் நடாத்திய தாக்குதலுக்கு 80 வரையானோர் பலியாகி உள்ளனர். இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என்கிறது அமெரிக்கா. இவ்விடயத்தால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மீண்டு முறுகல் நிலை தோன்றியுள்ளது.

ரஷ்யா இவ்விடயம் காரணமாக உரையாட ஐ.நா. பாதுகாப்பு சபையை உடனடியாக அழைத்துள்ளது. இதனால் விசனம் கொண்ட அமெரிக்காவின் சமந்தா பவர் ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார். அவசரகால ஐ. நா. கூட்டம் நியூ யார்க்கில், உள்ளூர் நேரப்படி சனி மாலை 7:30 க்கு கூடவுள்ளது.
.
சிரியாவின் நேரப்படி சனி இரவு இரண்டு F-16  விமானங்களும் ஒரு A-10 விமானமும் ஈராக் வான் பரப்பில் இருந்து நுழைந்தே இந்த தாக்குதலை நடாத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.
அமெரிக்கா தாம் IS குழு என்று கருதியே தாக்குதலை நடத்தியதாக கூறுகிறது. தாக்கப்பட்டவர்கள் சிரியாவின் இராணுவத்தினர் என்று ரஷ்யா கூறியவுடன் அமெரிக்கா தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி உள்ளது.
.
இது ஒரு தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என்றாலும், அமெரிக்கா தம்முடனும் சிரியாவுடனும் இணைந்து செய்யப்படாததே காரணம் என்றுள்ளது ரஷ்யா. அமெரிக்கா இணைந்து செயல்பட விரும்பவில்லை.
.