அமெரிக்க யுத்த கப்பல், பலசரக்கு கப்பல் மோதல்

USSFitz

USS Fitzgerald என்ற அமெரிக்காவின் யுத்த கப்பலும், பிலிப்பீன் நாட்டில் பதியப்பட்ட ACX Crystal என்ற கொல்கலன் காவும் பலசரக்கு கப்பலும் கடலில் மோதியதால் அமெரிக்காவின் யுத்த கப்பல் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அத்துடன் சுமார் 7 அமெரிக்க படையினரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
.
உள்ளூர் நேரப்படி சனி காலை 2:30 மணியளவில், ஜப்பானின் Shizuoka கரையில் இருந்து 20 km தொலைவில் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது.
.
சுமார் 222 மீட்டர் நீளம் கொண்ட ACX Crystal 29,060 தொன் எடை கொண்டது. அமெரிக்க யுத்த கப்பல் 154 மீட்டர் நீளமும், 8,315 தொன் எடையும் கொண்டது.
.
யுத்த கப்பல் பெரும் சேதத்துக்கு உள்ளாக்கியதாகவும், படிப்படியாக நீரை உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. வேறு ஒரு அமெரிக்க பாதுகாப்பு கப்பல் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்றுள்ளது.
.

1995 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த USS Fitzgerald ஜப்பானின் Yokosuka துறைமுகத்தை தளமாக கொண்டது. சாதாரணமாக இதில் 23 அதிகாரிகள், 24 சமையல்காரர், 291 படையினர் இருப்பார்.
.