அமெரிக்க விசாவுக்கு Facebook, Twitter விபரம்

Trump

அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் அந்நிய நாட்டவரிடம் அவர்களின் விண்ணப்பத்தில் Facebook, Twitter போன்ற 20 social media விபரங்களையும் (username) கேட்க முனைகிறது ரம்ப் அரசு. கடந்த 5 வருட இவ்வகை social media விபரங்களை (username) குறிப்பிடுமாறு கேட்கப்படலாம்.
.
இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரின், தற்கால தரவுகளின்படி, சுமார் 710,000 குடிவரவு விசா (immigrant visa) விண்ணப்பங்களும், சுமார் 14 மில்லியன் உல்லாச பயணிகளின் விண்ணப்பங்களும் social median விபரங்களை வழங்கும் நிலை ஏற்படும். வருடம் ஒன்றில் சுமார் 15 மில்லியன் அந்நியர் அமெரிக்காவுக்கான விசாவை பெற முனைகின்றனர்.
.
தற்போது கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, பிரான்ஸ் உட்பட சுமார் 40 நாட்டவர் விசா இன்றி அமெரிக்கா செல்ல முடியும். இவர்கள் மீது மேற்படி புதிய social median நிபந்தனை நடைமுறை செய்யப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.
.

கடந்த வெள்ளி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் தொடர்பான கருத்துக்கள் அடுத்துவரும் 60 நாட்களுக்கு பெறப்படும். அதன் பின்னர் இந்த திட்டத்தை நடைமுறை செய்வதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
.