அமெரிக்க வீடு கொள்வனவில் உலக கருப்பு பணம்

TimeWarner

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் Condo வகை வீட்டு விலை நியாயப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலகின் எல்லா பாகங்களில் இருந்தும் கருப்பு பணம் இந்த நாடுகளை நோக்கி நகர்வதே. அண்மையில் New York Times இதுபற்றி ஓர் கட்டுரை எழுதியுள்ளது, இது அதன் தொகுப்பு.
.
2008 ஆண்டில் உணமையான கொள்வனவாளர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மறைத்து பினாமிகள் (proxy) மூலம் நியூ யோர்க் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட உயர்விலை ($5 மில்லியன் க்கும் அதிகம்) வீடுகளின் வீதம் 39% மட்டுமே. ஆனால் 2014 இல் அந்த வீதம் 54%.
.
New York uptown இல் பினாமிகளின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட வீடுகளின் அளவு 60%. Downtown இல் இது 63%.
.
Bloomberg Tower இல் 57% வீடுகள் பினாமிகள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இது The Plaza towerஇல் 69%, One57 towerஇல் 77%, The Warner Center tower இல் 64%, Trump International tower இல் 57%, 15 Central Park West இல் 58%.
.
இந்த வகை condo களில் 900 இன் மொத்த பெறுமதி சுமார் 20,000 சராசரி அமெரிக்க வீடுகளின் மொத்த விலைக்கு சமமாகும்.
.
Los Angeles பகுதியில் 51% விலை உயர் condo கள் பினாமிகளினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. San Francisco வில் அது 48%, Miami யில் 37%,

பொதுவாக இந்த வீடுகளில் எவரும் குடியிருப்பது இல்லை. பினாமிகள், பொதுவாக lawyers, உறவினர், அல்லது கணக்காளர் மாதாந்த கட்டுமதிகளையும், வருட வரிகளையும் கட்டுவர்.

Time Warner tower இல் 192 condo கள் உள்ளன. அதில் 122 வீடுகளின் உரிமையாளர் பெயர், முகவரி என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 74 ஆம் மாடியில் உள்ள condo ஒன்றின் உரிமையாளர் 25CC ST74B L.L.C. ஆகும். New York Times ஆய்வின்படி இந்த condo முன்னாள் ரஷ்ய senator Vitaly Malkin இக்கு சொந்தமாகும்.
.
இதே tower இல் 72 ஆம் மாடியில் உள்ள condo ஒன்று Amantea Corporation இக்கு சொந்தமாகும். இதன் உண்மை உரிமையார் இந்திய வம்சாவளியான Anil Agarwal இக்கு சொந்தமானதாகும். இவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்.
.

அதே tower இல் 67ஆவது மற்றும் 58வது மாடிகளில் உள்ள condo களின் உரிமையாளர் Columbus Skyline LLC ஆகும். ஆனால் உண்மையில் அவை Wang Wenliang என்பவருக்கு சொந்தமானதாகும்.