அமெரிக்க chip அறிவாளிகள் சீனாவில் பணியாற்ற தடை

அமெரிக்க chip அறிவாளிகள் சீனாவில் பணியாற்ற தடை

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை நசுக்கும் நோக்கில் இதுவரை காலமும் அமெரிக்கா அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு தரம் உயர்ந்த கணனி chip விற்பனை செய்வதை தடை செய்திருந்தது. பின்னர் சீனாவுக்கு chip தயாரிக்கும் இயந்திரங்கள் விற்பனை செய்வதையும் தடை செய்தது. தற்போது அமெரிக்க chip அறிவாளிகள் சீனாவில் பணியாற்றுவதையும் தடை செய்கிறது.

பல சீனர்கள் முற்காலங்களில் அமெரிக்கா சென்று, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து, அமெரிக்க chip நிறுவனங்களில் பணியாற்றி அமெரிக்க குடியுரிமையும் பெற்று இருந்தனர். இவர்கள் பின்னர் சீனாவில் வேலைவாய்ப்பு கிடைக்க சீனா சென்று பணியாற்றினர். பொதுவாக நாடுகள்  தனது நாட்டவர் பிற நாடுகளில் தொழில் செய்து தன் நாட்டுக்கு பணம் அனுப்புவதை தட்டிக்கொடுத்து வந்தன. அதையே அமெரிக்காவும் செய்திருந்தது. ஆனால் தற்போது சீனாவை அழிப்பது பிரதான நோக்காயிற்று.

சுமார் 43 அமெரிக்க chip அறிவாளிகள் சீனாவில் தங்கியிருந்து உயர் பதவிகளை செய்வதாக கூறப்படுகிறது. அவர்கள் தற்போது தமது தொழிலை கைவிட வேண்டும் அல்லது அமெரிக்க குடியுரிமையை கைவிடல் வேண்டும். இவர்கள் சீன chip நிறுவனங்களில் CEO, President, director போன்ற உயர் பதவிகளை கொண்டுள்ளனர்.

பொதுவாக 2008ம் ஆண்டு சீனா நடைமுறை செய்திருந்த Thousands Talents என்ற திட்டத்தின் கீழேயே இவர்கள் சீன தொழில்களை பெற்று இருந்தனர்.

அமெரிக்காவில் Intel போன்ற நிறுவனங்களில் 20 ஆண்டுகள் பணியாற்றிய Gerald Yin என்பவர் சீனா சென்று Advanced Micro-Fabrication Equipment என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார்.

அமெரிக்க கடவுச்சீட்டு கொண்ட Shu Qingming, Cheng Taiyi ஆகியோர் GigaDevice Semiconductor என்ற சீன நிறுவனத்தில் chairman, director ஆகிய பதவிகளை கொண்டுள்ளனர்.

Chen Xinglong என்ற அமெரிக்க green card கொண்ட சீனர் KingSemi என்ற சீன chip நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்.