அமெரிக்க Goldman Sachs மீது மலேசியா வழக்கு

Equanimity

அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Goldman Sachs மீது புதிய மலேசிய அரசு நட்டஈட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னைய அரசின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற 1MDB ஊழலுக்கு Goldman Sachs உதவி செய்துள்ளது என்றே மலேசிய அரசு குற்றம் சுமத்தி உள்ளது. மலேசிய அரசு நட்டஈடாக சுமார் $2.7 பில்லியன் தொகையை கேட்டுள்ளது.
.
2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மலேசியாவின் அபிவிருத்திக்கு பயன்படுத்த என்று கூறி முன்னைய அரசு $6.5 பில்லியன் பணத்தை bond விநியோகம் மூலம் பெற்றிருந்தது. அந்த bond விற்பனையை Goldman Sachs நிறுவனமே மேற்பார்வை செய்திருந்தது. தனது சேவைக்காக Goldman $600 மில்லியன் கட்டணமும் அறவிட்டு இருந்தது.
.
அதேவேளை IMDB பணத்தில் இருந்து சுமார் 2.7 பில்லியன் காணாமல் போயுள்ளது. தற்போதை அரசின் கூற்றின்படி முன்னாள் பிரதமர் Najib Razak என்பவரும், அவருக்கு உதவியாக இருந்த வர்த்தகர் Jho Low என்பவரும் $2.7 பில்லியன் பணத்தை களவாடி உள்ளனர்.
.
முன்னாள் பிரதமர் தற்போது தடுப்பு காவலில் உள்ளார். அவர் மீதும் அவரின் மனைவி மீதும் வழக்குகள் தொடர்கின்றன.
.
Jho Low என்பவர் தற்போது தலைமறைவாகி உள்ளார். இவரின் Equanimity என்ற 91.5 மீட்டர் நீளம் கொண்ட உல்லாச கப்பல் (yacht) மலேசிய அரசால் கடந்த திங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த கப்பல் $250 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், அரை விலைக்கே மலேசிய அரசால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
.