அமெரிக்க Micron நிறுவன Chip மீது சீனா தடை

அமெரிக்க Micron நிறுவன Chip மீது சீனா தடை

அமெரிக்காவின் Micron Technology என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய கணனி chip சீனா தடை செய்கிறது. இந்த chip மூலம் அமெரிக்கா உளவு வேலை செய்யலாம் என்கிறது சீனா.

இந்த தடை சீனாவில் செய்யப்படும் பெரும் கட்டமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

Cyberspace Administration of China தெரிவித்த கூற்றின்படி Micron chip serious network security risks கொண்டுள்ளது.

Micron நிறுவனத்தின் CEO Sanjay Mehrotra ஜப்பானில் நடைபெற்ற G7 அமர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தார். இங்கு பல சீன எதிர்ப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டன.

கடந்த கிழமை ஜப்பானில் $3.6 பில்லியன் முதலிட Micron அறிவித்து இருந்தது.