அமெரிக்க MQ-9 வேவு விமானத்தை ரஷ்யா வீழ்த்தியது

அமெரிக்க MQ-9 வேவு விமானத்தை ரஷ்யா வீழ்த்தியது

கருங்கடல் மேலாக பறந்து ரஷ்யாவை வேவு பார்த்த அமெரிக்காவின் MQ-9 வகை ஆளில்லா வேவு விமானத்தை ரஷ்யா இன்று செவ்வாய் வீழ்த்தி உள்ளது. அதனால் அமெரிக்காவும், நேட்டோவும் (NATO) ஆவேசம் அடைந்துள்ளன.

அமெரிக்காவின் கூற்றுப்படி ரஷ்யாவின் இரண்டு Su-27 வகை யுத்த விமானங்கள் MQ-9 அருகே வந்து, பின் ஒரு Su-27 வேவு விமானம் MQ-27 மீது மோத, வேவு விமானம் கடலுள் வீழ்ந்துள்ளது. ஆனால் ரஷ்யா தாம் வேவு விமானம் மீது மோதவில்லை என்றும், Su-27 தீடீரென திரும்ப அந்த உதைப்பு வேவு விமானத்தை வீழ்த்தியது என்கிறது.

மேற்படி வேவு விமானம் இப்பகுதியில் தினசரி வேவு வேலையில் ஈடுபடுவது உண்டு. முன்னர் ரஷ்ய யுத்த விமானம் ஒன்று அமெரிக்காவின் MQ-9 விமானத்துக்கு மேலே பறந்து தனது எரிபொருளை வேவு விமானம் மீது பொழிந்ததாகவும் அமெரிக்காவின் பென்டகன் கூறியுள்ளது.

வேவு விமானத்தை கடலில் இருந்து மீட்டால் அல்லது Su-27 விமானத்தை பரிசோதித்தால் மட்டுமே ஓரளவு உண்மை வெளிப்படும்.