அமெரிக்க Republican கட்சிக்குள்ளும் ஒரு யுத்தம்

அமெரிக்க Republican கட்சிக்குள்ளும் ஒரு யுத்தம்

அமெரிக்காவில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன. ஒன்று றேகன், புஷ், ரம்ப ஆகியோரின் Republican கட்சி, மற்றையது கிளின்டன், ஒபாமா, பைடென் போன்றோரின் Democratic கட்சி.

பொதுவாக இஸ்ரேலுக்கு நிபந்தனை எதுவும் இன்றி, கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவது Republican கட்சி. ஆனால் அது தற்போதைய ஹமாஸ்-இஸ்ரேல் சண்டையில் கதை எதுவுமின்றி ஒதுங்கி உள்ளது. அதற்கு காரணம் தற்போது Republican கட்சிக்கு உள்ளே பெரும் யுத்தம் ஒன்று நடைபெறுகிறது.

கடந்த தேர்தலில் Republican கட்சி அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான House சபையை வென்று இருந்தது (Senate காங்கிரசின் மற்றைய சபை). அதனால் Speaker of the House பதவி Republican கட்சிக்கு சென்றது.

Republican கட்சியின் Kevin McCarthy மேற்படி speaker பதவிக்கு போட்டியிட்டார். House சபையில் போதிய வாக்குகளை கொண்டிருந்த Republican கட்சி McCarthy யை முதலாவது வாக்கெடுப்பிலேயே இலகுவில் வெற்றி அடைய செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

McCarthy க்கு எதிரான அதே கட்சியை சார்ந்த Matt Gaetz போன்ற உறுப்பினர் பலர் McCarthy க்கு வாக்களிக்கவில்லை. அதனால் வாக்களிப்பு மீண்டும், மீண்டும் நடைபெற்றது. McCarthy 15 ஆவது வாக்கெடுப்பின் பின்னரே speakerஆக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனாலும் 15 ஆவது வாக்கெடுப்பில் வென்ற  McCarthy யால் நீண்ட காலம் speaker பதவியை கொண்டிருக்க முடியவில்லை. செப்டம்பர் மாதம் அவரை Matt Gaetz போன்ற அவரின் கட்சி உறுப்பினரே பதவியில் இருந்து புரட்சி செய்து விலகினர். இது புதியதோர் speaker தேர்வுக்கு காரணமானது.

இம்முறை Matt Gaetz, ரம்ப் ஆகியோரின் ஆதரவுடன் Jim Jordan என்பவர் speaker பதவிக்கான தேர்தலில் குதித்தார். ஆனால் அவரும் முதல் இரண்டு வாக்கெடுப்புகளில் தேவையான வாக்குகளை பெறவில்லை. செவ்வாய் இடம்பெற்ற முதலாம் வாக்கெடுப்பில் 20 Republican உறுப்பினர் தமது கட்சியினரான Jordan க்கு வாக்களிக்கவில்லை. புதன் இடம்பெற்ற இரண்டாம் வாக்கெடுப்பில் 22 Republican உறுப்பினர் Jordan க்கு வாக்களிக்கவில்லை. Jordan பெற்றது 199 வாக்குகள் மட்டுமே.

அதேவேளை Democratic கட்சியின் Hakeem Jeffries அக்கட்சியின் அனைத்து வாக்குகளையும் (212 வாக்குகள்) பெற்றுள்ளார். Speaker பதவியை அடைய 217 வாக்குகளை பெறல் அவசியம்.

மூன்றாம் வாக்கெடுப்பு விரைவில் இடம்பெறும்.

அமெரிக்காவில் தற்போது Speaker of the House இல்லை. அதனால் முடங்கி இருக்கிறது காங்கிரஸ்.