அமெரிக்க SpaceX யுக்கிறேன் யுத்தத்திலும் உழைப்பு?

அமெரிக்க SpaceX யுக்கிறேன் யுத்தத்திலும் உழைப்பு?

உலகின் தற்போதைய முதலாவது செல்வந்தரான Elon Musk ஆரம்பித்த SpaceX என்ற தொழில்நுட்ப நிறுவனம் Starlink என்ற செய்மதி தொடர் மூலம் உலகின் எந்த பாகத்துக்கும் இணைய சேவையை வழங்கும் வசதிகளை கொண்டது. ஆனால் இந்த சேவைக்கான செலவுகள் அதிகம். ஒரு கருவிக்கான மாத செலவு $4,500 வரை ஆகலாம்.

ரஷ்யா யுக்கிரேனை தாக்கி அவர்களின் இணைய தொடர்புகளை அழித்த வேளையில் Starlink நிறுவனம் சுமார் 20,000 சிறிய இணைய இணைப்பு கருவிகளை யுகிரேனுக்கு வழங்கி அவை மூலம் இலவச இணைய சேவையை வழங்கியது. அந்த கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியிடங்களுடன் தொடர்பு கொண்டனர்.

பொதுமக்கள் மட்டுமன்றி யூக்கிறேன் இராணுவமும் Starlink கருவிகளை பயன்படுத்துகின்றன. இராணுவம் மேலும் 8,000 கருவிகளை பெற விரும்புகிறது.

ஆனால் இந்த சேவையை மேலும் தொடர பெரும் பணம் வழங்கும்படி கேட்கிறது SpaceX. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசையை காட்டி, பின் கட்டணம் அறவிட முனைகிறது SpaceX.

இந்த சேவைக்கு மாதம் சுமார் $20 மில்லின் செலவாகிறது எனவும் அந்த செலவை SpaceX தொடர்ந்து பொறுப்பெடுக்க முடியாது என்றும் செலவை அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களமான பென்ரகன் (Pentagon) பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் Elan Muck தெரிவித்து உள்ளார்.

சில தினங்களுக்கு முன் Musk தனது கூற்று ஒன்றில் யுக்கிரேன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து யுத்தத்தை நிறுத்த வழி காண வேண்டும் என்று கூறி மேற்கில் பலரின் வெறுப்பை அடைந்திருந்தார். கிரைமியா ரஷ்யாவின் அங்கம் என்பதையும் உலகம் ஏற்க வேண்டும் என்றும் Musk முன்னர் கூறியிருந்தார்.