அம்பு தாக்குதலுக்கு நோர்வேயில் பலர் பலி

அம்பு தாக்குதலுக்கு நோர்வேயில் பலர் பலி

வில் மூலம் ஏவப்பட்ட அம்பு தாக்குதலுக்கு நோர்வேயின் Kongsberg பகுதில் பலர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர் என்று அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று புதன் மாலை 6:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. முதலில் தாக்குதல் Coop Extra என்ற பண்டகசாலையில் நிகழ்ந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

சுமார் 28,000 மக்களை கொண்ட Kongsberg நகரம் தலைநகர் ஒஸ்லோவில் இருந்து 85 km தூரம் தென் மேற்கே உள்ளது.