அயர்லாந்து இஸ்ரேல் உறவை துண்டிக்கும்?

அயர்லாந்து இஸ்ரேல் உறவை துண்டிக்கும்?

பலஸ்தீனர்களின் நிலத்தை தொடர்ந்தும் இஸ்ரேல் அபகரிப்பதால், அயர்லாந்து இஸ்ரேல் உடன் கொண்டுள்ள உறவை விரைவில் துண்டிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

அந்நாட்டின் எதிர்க்கட்சியான Sinn Fein சமர்ப்பித்த பிரேரணை ஒன்றை அரசு வாக்கெடுப்புக்கு விடவுள்ளது. அத்துடன் அரசும் அந்த பிரேரணையை ஆதரிக்கிறது. நேற்று செவ்வாய் அரசு இந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளது.

விதிமுறைகளுக்கு அப்பால் இஸ்ரேல் 1967ம் ஆண்டு ஆக்கிரமித்த West Bank பகுதிகளை நடைமுறையில் தனதாக்குகிறது என்பதே அயர்லாந்தின் கூற்று. இதை அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்  ‘de facto annexation’ என்று கூறியுள்ளார்.

பல மேற்கு நாடுகள் இந்த கருத்தையே கொண்டிருந்தாலும், எந்தவொரு மேற்கு நாடும் அமெரிக்காவின் ஆதரவில் இருக்கும் இஸ்ரேலை தண்டிக்க முனைவரவில்லை. அயர்லாந்தே இஸ்ரேலுன் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்படும் முதல் ஐரோப்பிய நாடாகிறது.

People Before Profit என்ற இந்த பிரேரணை அயர்லாந்தில் சட்டமானால், அயர்லாந்து இஸ்ரேல் தூதுவரை வெளியேற்ற நேரிடும்.

பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலுடன் இணைய, அரபுக்களோ அல்லது இஸ்லாமியரோ அல்லாத உலக மக்கள் பெருமளவில் பலஸ்தீனர் உரிமைகளில் தற்போது அக்கறை கொண்டுள்ளனர்.