அரசியவாதிக்கு தண்டம், போலீஸுக்கு இடமாற்றம்

India

இந்தியாவின் உத்தர பிரதேச ஆளும் கட்சியான BJP உறுப்பினர் ஒருவருக்கு வாகன போக்குவரத்து தண்டம் விதித்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தூர இடமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
.
Shrestha Thakur என்பவர் உத்தர பிரதேசத்தின் Bulandshahr நகரின் உதவி SP பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி. அவர் ஜூன் 22 ஆம் திகதி BJP உறுப்பினரான Pramod Kumar என்பவருக்கு, உரிய பத்திரங்ககள் இல்லாமை, வாகன இலக்க தகடு இல்லாமை, தலைக்கவசம் இல்லாமை போன்ற குற்றங்களுக்காக தண்டம் விதித்து இருந்தார்.
.
இதை அறிந்து மேற்படி பொலிஸாரை அணுகிய அவ்விட BJP தலைவர் Mukesh Bhardwaj அந்த பெண் போலீசாருடன் வாதத்தில் ஈடுபட்டு இருந்தார்.
.
அப்போது தாம் இவ்வாறு சோதனை இடல் வேண்டாம் என்றால், அதை முதலமைச்சரிடம் இருந்து எழுத்து மூலம் எடுத்து வரும்படி கூறியுள்ளார் அந்த போலீஸ் அதிகாரி.
.

சிலநாளில் அந்த அதிகாரி நேபாள எல்லையில் உள்ள நகர் ஒன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தனக்கு மற்றம் கிடைக்கும் காலம் இதுவல்ல என்கிறார் அந்த போலீஸ் அதிகாரி.
.
https://www.youtube.com/watch?v=F5Vh7U9402c
.