அரச பணத்தில் அம்பானியின் மனைவிக்கு பாதுகாப்பு

Ambani

 

இந்தியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $20 பில்லியன்.  ஆனால் இவரின் மனைவி Nita அம்பானிக்கு 10 பேர் கொண்ட இந்தியாவின் அதிவிசேட பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்குகிறதாம். தனது 27 மாடி வீட்டில் சுமார் 600 வேலையாளர்களுடன் வாழும் இவருக்கு அரச பணத்தில் பாதுகாப்பு வழங்கும் செய்தியை Hindustan Times வெளியிட்டு இருக்கிறது.
.

இவரின் கணவர் முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு முதல், பயங்கவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, மேல் குறிப்பிட்ட பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் அதற்கான செலவை முகேஷ் அம்பானியே பொறுப்பு எடுத்துள்ளார். ஆனால் மனைவியின் பாதுகாப்பு அரச பணத்திலேயே செய்யப்படுகிறது.
.