அரபு, இஸ்லாமிய தலைவர்கள் பெய்ஜிங்கில்

அரபு, இஸ்லாமிய தலைவர்கள் பெய்ஜிங்கில்

சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi இன்று திங்கள் காசா யுத்தம் தொடர்பாக உரையாட சவுதி, ஜோர்டான், எகிப்து, இந்தோனேசியா, PA, Organization of Islamic Cooperation தலைவர் ஆகியோரை பெய்ஜிங் அழைத்து  உறையாடி உள்ளார்.

உலக நாடுகள் விரைந்து காசா யுத்தத்துக்கு தீர்வு ஒன்றை கண்டு அழிவை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். சீனா உடனடி யுத்த நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனரை “collective punishment” மூலம் தண்டிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் கேட்டுள்ளார்.

அண்மையில் சவுதியில் தம்முள் கூடிய இந்த தலைவர்கள் திடமான தீர்மானம் எதற்கும் இணங்கி இருக்கவில்லை. பஹ்ரைன் போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் புதிதாக ஏற்படுத்திய உறவை காசாவுக்காக உடைக்க விரும்பவில்லை.