அஸ்ரேலியாவின் பெரிய நகரம் Melbourne, சிட்னி அல்ல

அஸ்ரேலியாவின் பெரிய நகரம் Melbourne, சிட்னி அல்ல

தற்போது அஸ்ரேலியவின் மிக பெரிய நகரமாக Melbourne மாறியுள்ளது. அதனால் சுமார் 100 ஆண்டு காலமாக அஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரம் என்ற புகழை கொண்டிருந்த சிட்னி இரண்டாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டு உள்ளது.

2021ம் ஆண்டில் Australian Bureau of Statistics பெற்ற தவுகளின்படி மெல்பெர்னின் சனத்தொகை 4,875,400 ஆக இருந்துள்ளது. அத்தொகை சிட்னியின் சனத்தொகையில் 18,700 அதிகம்.

மெல்பெர்ன் நகருக்கு அண்மையில் உள்ள Melton என்ற சிறு நகரம் மெல்பெர்ன் நகருடன் இணைக்கப்பட்டமையும் மெல்பெர்னின் சனத்தொகை உயர காரணமாகியது.

1905ம் ஆண்டுக்கு முன்னர் தங்க அகழ்வை நோக்கி மக்கள் ஓடிய (gold rush) காலத்திலும் மெல்பெர்ன் அதிக சனத்தொகையை கொண்டிருந்தது.