அஸ்ரேலிய குடியேற்றத்தில் சீனரை பின் தள்ளும் இந்தியர்

அஸ்ரேலிய குடியேற்றத்தில் சீனரை பின் தள்ளும் இந்தியர்

அண்மை காலங்களில் சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் நிகழும் மோதல்கள் காரணமாக சீனர்கள் அஸ்ரேலியா செல்வது குறைந்து வந்துள்ளது. அதனால் அஸ்ரேலியா செல்லும் இந்தியர்களின் தொகை சீனர்கள் தொகையிலும் அதிகமாகி உள்ளது.

தற்போது அஸ்ரேலிய சனத்தொகையின் 2.8% இந்தியராகவும், 2.3% சீனராகவும் உள்ளனர். முதலாம் இடத்தில் 3.8% பங்கை கொண்ட பிரித்தானியர் உள்ளனர்.

2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலத்தில் 373,000 இந்தியர் அஸ்ரேலியா சென்று குடியேறி உள்ளனர். அதே காலத்தில் 208,000 சீனர்கள் மட்டுமே அஸ்ரேலியா சென்று குடியேறி உள்ளனர்.

அதுமட்டுமன்றி அஸ்ரேலியா தனது வளர்ச்சிக்கு குடிவரவாளரை மட்டுமே நம்பி உள்ளது. சுமார் 50% அஸ்ரேலியர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள், அல்லது வெளிநாடுகளில் பிறந்த பெற்றாரின் பிள்ளைகள். இவர்களே அஸ்ரேலியாவின் பொருளாதாரம் தொடர்ந்தும் வளர காரணம்.