ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா யுத்த குற்றம்?

ICC

2003-05-01 முதல் 2014-12-31 வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் படைகளும், CIAயும் யுத்த குற்றங்களை செய்திருக்கலாம் என்று International Criminal Court (ICC) கூறியுள்ளது.
.

இன்று திங்கள் (2016-11-14) ICCயின் தலைமை வழக்கறிஞர் Fatou Bensouda இந்த கருத்தை தெரிவித்து உள்ளார். ஆப்கானித்தானில் இடம்பெற்றது என கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை விசாரணைகளை மேற்கொண்ட இவர், தான் விரைவில் ICC நீதிபதிகளை அணுகி இக்குற்றங்களை ஆழமாக விசாரிக்க அனுமதி கேட்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
.
2003 முதல் 2014 வரையான காலங்களில் ஆப்கானிஸ்தான் இராணுவம், தலபான்கள், அமெரிக்க இராணுவம், CIA எல்லாமே யுத்த குற்றம் புரிந்திருக்கலாம் என்கிறார் இவர். குறைந்தது 61 பேர் அமெரிக்கர்களின் கைகளில் சித்திரவதைப்பட்டு இருக்கலாம் என்றும் இவர் கூறியுள்ளார். இந்த குற்றங்களை தனிநபர்கள் செய்யவில்லை என்றும், தலைமைகளின் கொள்கை அடிப்படையிலேயே செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் இவர் கூறியுள்ளார்.
.
அமெரிக்கா ICCயில் ஒப்பமிடாத நாடு. ஆனால் ஆப்கானித்தான் 2003 ஆம் ஆண்டுமுதல் ICCயில் ஒப்பமிட்ட நாடு, அதனால் ஆப்கானித்தானில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க ICCக்கு உரிமை உண்டு.
.
ICC ஆபிரிக்க நாடு விடயங்களை மட்டுமே விசாரணை செய்கிறது என்றும், மேற்கு நாடுகளை தவிர்க்கிறது என்றும் கூறி அண்மையில் 3 ஆபிரிக்க ICCயில் இருந்து விலகி இருந்தன.
.
ICC குற்றங்களை விசாரணை செய்தாலும், குற்றவாளிகளை கைதுசெய்ய இதனிடம் சட்ட பலமோ, சொந்தமாக படை பலமோ இல்லை.

.