ஆய்வுகளில் அமெரிக்காவை பின் தள்ளும் சீனா, கூறுகிறது அஸ்ரேலியா

ஆய்வுகளில் அமெரிக்காவை பின் தள்ளும் சீனா, கூறுகிறது அஸ்ரேலியா

மொத்தம் 44 emerging தொழில்நுட்ப ஆய்வுகளில் 37 இல் சீனா அமெரிக்காவை பின்தள்ளி உள்ளது என்கிறது Australian Strategic Policy Institute (ASPI) என்ற அஸ்ரேலிய ஆய்வு குழு. இதனால் மேற்கின் சனநாயங்கங்கள் தமது தொழிநுட்ப ஆளுமையை இழக்க நேரிடும் என்றும் மேற்படி அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன் சில பிரதான ஆய்வுகளில் உலகின் முதல் 10 ஆய்வு நிலையங்கள் சீனாவில் உள்ளதாகவும் ASPI கூறியுள்ளது.

அமெரிக்கா high-performance computing, quantum computing, சிறிய செய்மதி, நோய் தடுப்பு மருந்து (vaccines) ஆகிய துறைகளில் தற்போதும் முன்னிலையில் உள்ளது என்றும் மேற்படி ஆய்வு கூறியுள்ளது. மேற்கின் mRNA முறையில் தயாரிக்கப்பட்ட COVID தடுப்பு மருந்து சீன மருந்திலும் பலமானதாக இருந்தது.

2021ம் ஆண்டு சீனா பகிரங்கப்படுத்திய hypersonic ஏவுகணை மேற்கு நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது என்றும், இதற்கான சீனாவின் முன்கூட்டிய ஆய்வுகளை மேற்கு அறிந்திருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட high-impact ஆய்வுகளில் 48.49% சீனாவினுடையது என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் photonic sensor மற்றும் quantum communication ஆய்வுகள் Five Eyes என்ற பிரித்தானிய, அமெரிக்க, அஸ்ரேலிய, கனேடிய, நியூ சிலாந்து புலாய்வுகளை விரைவில் இருட்டில் வைக்கும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

சராசரியா சீனாவின் 5 ஆய்வாளர்களில் ஒருவர் பிரித்தானியா, அமெரிக்கா, அஸ்ரேலியா, கனடா, நியூ சிலாந்து ஆகிய நாடுகளில் படித்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அஸ்ரேலியா செய்த இந்த ஆய்வுக்கு அமெரிக்காவின் State Department உம் நிதியுதவி செய்துள்ளது.