ஆறு மாதங்களின் பின் ரம்ப்-சீ ஜின்பிங் தொடர்பு

US_China

ஆறு மாதங்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ரம்பும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளனர்.
.
சீனா மீது தடைகளை விதித்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்து ஒரு வர்த்தக யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார் ரம்ப். சீனா வேறுவழி இன்றி தனது கூற்றுப்படி செயல்படும் என்று கருதியும் இருந்தார் அவர்.
.
ஆனால் சீனா பதிலுக்கு தானும் புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்க பொருட்களுக்கு விதித்து, ரம்ப்  ஆதரவாளர் உற்பத்தி செய்யும் பொருள்களின் கொள்வனவை பெருமளவில் குறைத்து, தொடர்புகளையும் துண்டித்து இருந்தது. அமெரிக்காவுடனான பொருளாதாரா பேச்சுக்களை மட்டுமன்றி, இராணுவ சந்திப்புகளையும் இடைநிறுத்தியது சீனா.
.
ஆறு மாதங்களின் பின் இன்று இரண்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் உரையாடி உள்ளனர். இரு பகுதிகளும் உரையாடல் நலமே இடம்பெற்றதாக கூறி உள்ளன. அத்துடன் இந்த மாதம் 30 ஆம் திகதி ஆர்ஜென்ரீனாவில் இடம்பெறவுள்ள G20 மாநாடு காலத்திலும் இருவரும் நேரடியாக உரையாடவுள்ளனர்.
.
வர்த்தகம், வடகொரியா, இராணுவ விரிவாக்கம் என்பன இவர்களிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள் ஆகும்.

.