ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கையில் ஊழல்

SMEC

இரண்டு ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கை, கொங்கோ (Congo) ஆகிய நாடுகளில் அரசில்யவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மைகள் பெற்றுள்ளதாக The Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது.
.
Snowy Mountains Engineering Company என்ற நிறுவனம் இப்போது Australian Federal Police (AFP) விசாரணையில் உள்ளதாம். இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டில், நன்கொடை பணம் மூலம், $2.3 மில்லியன் செலவில் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை செய்யும் பொறுப்பை பெற்றுக்கொள்ள இலங்கை அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.
.
இந்நிறுவன emailகளின்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது ஆலோசகர்களும் அரசியல் அன்பளிப்புக்களை நிர்ப்பத்திதாகவும் கூறப்படுகிறது. அப்போது சிறிசேன அமைச்சராக இருத்திருந்தார்.
.
அணை ஒன்றை கட்டும் செயல்பாட்டிலும் இலஞ்சம் சம்பந்தப்பட்ட்தாக கூறப்படுகிறது. இந்த அபிவிருத்தி உலகவங்கியின் உதவியுடன் $1.82 செலவில் திட்டமிடப்பட்டு இருந்தது.
.
இதுபற்றி கருத்து தெரிவித்த சிறிசேன “no knowledge of the incident” என்றுள்ளாராம். அத்துடன் தான் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
.
Tabcorp, Leighton Holdings and BHP Billiton என்ற நிறுவனம் Congo ஜனாதிபதி Denis Sassou Nguesso வின் மகனுக்கு பல மில்லியன் டாலர்கள் செலுத்தி பொருளாதார நன்மைகள் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
.