இடிந்த இந்திய குகையில் அகப்பட்டோர் மீட்பு இடைநிறுத்தம்

இடிந்த இந்திய குகையில் அகப்பட்டோர் மீட்பு இடைநிறுத்தம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், இமாலய பகுதியில் கடந்த ஞாயிறு குகை பாதை ஒன்றில் அகப்பட்ட 40 பணியாளர்களை காப்பாற்றும் பணி மீண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. மலை மேலும் உடையும் சத்தம் கேட்டதாலேயே மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

அகப்பட்டு உள்ளவர்களுக்கு நீர், உணவு, மறுத்து ஆகியன வேறு சிறு குழாய் மூலம் தொடர்ந்தும் அனுப்பப்படுகிறது.

அகப்பட்டு உள்ளவர்களுடன் walkie-talkie மூலம் தொடர்புகளும் பேணப்படுகிறது.

அகப்பட்டவர் வெளியேற மனிதர் நுழைந்து செல்லக்கூடிய குழாய் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 22 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இது மொத்த  நீளத்தின் 1/3 பங்கு மட்டுமே. மீட்புக்கு மேலும் 44 மீட்டர் நீள குழாய் அமைக்கப்படல் அவசியம்.

சீன எல்லையோரம் இந்திய இராணுவம் இலகுவில் நகர்வதற்கு வசதியாக இந்தியா மலைகள் நிரம்பிய இப்பகுதியில் வீதிகளை அமைகிறது. அவ்வாறு அமைக்கப்படும் குகை பாதை ஒன்றே இடிந்துள்ளது.