இத்தாலியில் பாகிஸ்தான் பெற்றார் மகளை கொலை?

இத்தாலியில் பாகிஸ்தான் பெற்றார் மகளை கொலை?

இத்தாலியில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் குடும்பம் ஒன்று Saman Abbas என்ற அவர்களின் 18 வயது மகளை கொலை செய்திருக்கலாம் என்று இத்தாலி போலீசார் நம்புகின்றனர். பெற்றார் மகளுக்கு பேச்சு திருமணம் ஒன்றை செய்வதை மகள் மறுத்ததாலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சு திருமணத்தை மறுத்த மகள் இத்தாலியின் சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கடந்த நவம்பர் மாதம் சென்றிருந்தாள். ஆனால் ஏப்ரல் மாதம் 11ம் திகதி அவள் மீண்டும் பெற்றோரிடம் வாழ சென்றிருந்தாள்.

மே மாதம் 5ம் திகதி அவளின் நலனை அறிய சென்ற அதிகாரிகள் அவர்களின் வீடு வெறுமையாக இருந்ததை அறிந்து உள்ளனர். பெற்றார், மாமன், இரு மைத்துனர் ஆகிய 5 பேரும் பாகிஸ்தான் திருப்பியதை அதிகாரிகள் பின்னர் அறிந்து உள்ளனர். மகள் பாகிஸ்தான் சென்றதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

அங்கிருந்த வீடியோக்கள் ஏப்ரல் மாதம் 29ம் திகதி 5 பேர் நிலம் கிண்டி (shovels), வாளி போன்றவற்றுடன் சென்று, பின் 2.5 மணித்தியாலங்களின் திரும்பியதை காட்டி உள்ளன. அப்பகுதி எங்கும் தேடுதல் நடைபெறுகிறது.