இந்தியாவின் அக்கினி-5 இன்று வெற்றிகர ஏவல்

Agni-5

இந்தியா தனது அக்கினி-5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM – Intercontinental Ballistic Missile) இன்று வியாழன் காலை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) உள்ள ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கணை சுமார் 19 நிமிடங்களில் 4,800 km பயணித்து இந்து சமுத்திரத்துள் வீழ்ந்துள்ளது.
.
சுமார் 55 அடி நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1.5 தொன் அணுக்குண்டு (payload) காவி செல்லக்கூடியது. ஏவுகணையின் மொத்த நிறை 50 தொன் ஆகும்.
.
இந்திய ஜனாதிபதி Ram Nath Kovind இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்த வெற்றி “ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைக்கிறது” என்றுள்ளார்.
.
இந்தியாவின் அக்கினி-1 ஏவுகணை 700 km தூரமும், அக்கினி-2 ஏவுகணை 2,000 km தூரமும், அக்கினி-3, அக்கினி-4 ஆகிய ஏவுகணைகள் சுமார் 2,500 முதல் 3,500 km தூரமும் செல்லக்கூடியவை.
.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், வடகொரியா ஆகிய நாடுகளிடம் ஏற்கனவே அக்கினி-5க்கும் மேலாக பலம்வாய்ந்த ICBMகள் உள்ளன.
.