இந்தியாவின் கட்டளையை X நிராகரித்தது, ஆனாலும் அடிபணிந்தது

இந்தியாவின் கட்டளையை X நிராகரித்தது, ஆனாலும் அடிபணிந்தது

தற்போது டெல்லியை நோக்கி படையெடுக்கும் 42 உழவர்களின் X (Twitter) கணக்குகளை மூடவும், அவர்களின் பதிவுகளை அழிக்கவும் இந்திய அரசு கட்டளையிட்டு இருந்தது.

பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் X தாம் இந்திய அரசின் கட்டளையை நிராகரிப்பதாக கூறியுள்ளது. ஆனாலும் தாம் இந்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப மேற்படி 177 கணக்குகளையும் முடக்கி வைப்பதாக கூறியுள்ளது. வருமானமா, கொள்கையா என்ற போட்டியில் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.

மொத்தம் 177 கணக்குகளை இந்தியா அழிக்க கட்டளை இட்டுள்ளது. அதில் 35 Facebook links, 35 Facebook கணக்குகள், 14 Instagram கணக்குகள், 42 X கணக்குகள், 49 X links, 1 Snapchat கக்கு , 1 Reddit கணக்கு ஆகியன அடங்கும்.

இந்தியா தன்னை ஒரு சனநாயக நாடாக தன்னை உலகுக்கு காட்ட முனைந்தாலும் தான் சந்திக்கும் முரண்பாடுகளை சீன முறையிலேயே கையாள்கிறது.