இந்தியாவில் அதிஉயர் வெப்பம்

India

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது வெப்பநிலை அதிஉயர்வாக காணப்படுகிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 48 C ஆகவுள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 47 C ஆக்கவுள்ளது.
.
ஆந்திராவிலும், தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த மாதத்தில் மட்டும் 220 பேர் வெட்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். கடந்த 4 வருடங்களில் சுமார் 4,620 பேர் இந்தியாவில் வெட்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்று இந்தியாவின் Earth Sciences அமைச்சு கூறியுள்ளது.
.
இந்த அதிஉயர் வெட்பத்துக்கு மக்கள் மட்டுமன்றி, கால்நடைகளும், பயிர்களும் கூடவே அழிகின்றன.
.

இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தானும் இந்த வெட்ப அலையால் பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நகரில் வெட்பநிலை 46 C ஆக்கவுள்ளது. அங்கு இந்த அதிஉயர் வெட்பம் கடந்த 9 நாட்களாக நிலவுகின்றது.
.